உலகப் பொருளாதார மந்த நிலையால் பல துறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஆட்டோமொபைல், வங்கி துறைகளை அடுத்து தற்போது இரும்பு உற்பத்தி தொழிலும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக 7.5 முதல் 8 விழுக்காடுகள் வளர்ச்சியில் இருந்த இரும்பு நிறுவனங்கள், தற்போது நான்கு முதல் ஐந்து விழுக்காடு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறைகளின் வீழ்ச்சி, கட்டுமானப் பணிகளின் முடக்கம் தான், இதற்கு முக்கிய காரணம் என இரும்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர்.
இரும்பு விற்பனை இந்த ஆண்டு 5 முதல் 6 விழுக்காடு குறைந்த நிலையில், 2020 ஆண்டுக்குள் 12 முதல் 13 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளது என கிரீஸில்(Crisil) நிறுவனம் அறிவித்துள்ளது. ஜனவரி 2019இல் ரூபாய் 42ஆயிரத்துக்கு விற்பனை ஆன ஒரு டன்(Tonne) இரும்பு, தற்போது 10 விழுக்காடு சரிந்து 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது.
இதையும் படிங்க :#BloombergGBF 'முதலீடு செய்யவேண்டும் என்றால், இந்தியாவுக்கு வாருங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி!