ETV Bharat / business

ஊரடங்கு எதிரொலி : 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பெங்களூரு நிறுவனம்

பெங்களூருவைச் சேர்ந்த லிவ்ஸ்பேஸ் நிறுவனம் ஊரடங்கு காரணமாக 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

ஊழியர்கள் பணி நீக்கம்
ஊழியர்கள் பணி நீக்கம்
author img

By

Published : May 26, 2020, 3:47 PM IST

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் லிவ்ஸ்பேஸ். வீடுகள் வடிவமைப்பு, கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், தன் ஒட்டுமொத்த பணியாளர்களில் 15 விழுக்காடு ஊழியர்களை பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது.

கடந்த 63 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல நிறுவனங்கள் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், வருமானம் வழங்க வழியின்றி, பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது லிவ்ஸ்பேஸ் நிறுவனம் 450 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. முன்னதாக, இதே வீடுகள் கட்டமைப்பு, வடிவமைப்புத் துறையைச் சேர்ந்த வி வொர்க் நிறுவனமும் தன் 100 பணியாளர்களை பணி நீக்கம் செய்து அறிவித்தது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வந்த லிவ்ஸ்பேஸ் நிறுவனம், ஊரடங்கு காரணமாக ஆர்டர்களை இழந்து இந்த முடிவை எட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தை கட்டமைக்க உதவிய ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மிகவும் வருந்தத்தக்க, கடினமான முடிவு என்றும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : அட்டகாசமாக வெளியான ரியல்மியின் நான்கு தயாரிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.