ETV Bharat / business

பிணை இல்லா கடன்; முத்ரா திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை! - SHISHU

டெல்லி: இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி அடமானம் இல்லா கடன் வழங்க பரிந்துரைத்துள்ளது.

முத்ரா திட்டம்
author img

By

Published : Jun 19, 2019, 3:34 PM IST

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இது குறுந்தொழில் மேம்பாடு; மறுநிதி நிறுவனம் - முத்ரா (Micro Units Development and Refinance Agency - MUDRA) மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த முத்ரா திட்டம் மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.

இந்த முத்ரா திட்டத்தில் மூன்று பிரிவுகளில் தற்போது வங்கிகள் கடன் வழங்கிவருகின்றன. அதோடு இந்த முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ.50,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.20 லட்சம் வரை அடமானமில்லா இந்தக் கடனை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக் குழு.

குறிப்பாகக் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் கடன்களை வழங்குகிறது. அதில் சிசு, கிஷோர், தருண் ஆகிய மூன்று திட்டங்களின் மூலம் கடன் வழங்கப்பட்டுவருகிறது.

  • சிசு (SHISHU) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 வரை கடன் பெறலாம்.
  • கிஷோர் (KISHOR) - இத்திட்டம் மூலமாக ரூ.50,000 - 5 லட்சம் வரை கடன் பெறலாம்.
  • தருண் (TARUN) - இத்திட்டம் மூலமாக ரூ.5 லட்சம் - 10 லட்சம் வரை கடன் பெறலாம்

என இருந்துவந்தது. ஆனால் இது தற்போது அதிகரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் முத்ரா கடனை பெற எந்தவித சொத்து அடமானமும் தேவை இல்லை; தனிநபர் பிணையும் தேவையில்லை. அதோடு ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும்.

அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்ற நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் முன்னர் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை மட்டுமே வழங்கப்பட்டுவந்த இந்த அடமானமில்லா கடன் தொகையை, தற்போது ரூ.20 லட்சம் வரை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக் குழு.

Intro:Body:

MARKET

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.