ETV Bharat / business

ரெப்போ வட்டியை 25 புள்ளிகள் குறைத்த ரிசர்வ் வங்கி! - ஜி.டி.பி

வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டியில் 25 புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன் மூலம், ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கூட்டம்
author img

By

Published : Apr 4, 2019, 7:23 PM IST

Updated : Apr 4, 2019, 8:57 PM IST

நாட்டின் நிதி கொள்கை ஆய்வுக் கூட்டத்தை2 மாதங்களுக்கு ஒருமுறைமும்பையில்ரிசர்வ் வங்கி நடத்துவது வழக்கம்.ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும்அந்தக் கூட்டத்திற்கு, நாட்டின் வட்டி விகிதம் குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உண்டு. அந்த வகையில், இம்முறை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் அந்த ஆய்வுக்கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது.

இதில், ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்நடவடிக்கையின் விளைவாக வங்கி வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அமையும்என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வீடு, வாகன, சொத்துக்கடன்களைப் பெற்றவர்கள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டித் தொகையை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியத் தர வர்க்கத்தினர் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Shakthi kantha das
ஆளுநர் சக்திகாந்த தாஸ்

2019-20 ஆண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாட்டின் சில்லறை பணவீக்க விகிதமும் 2.4 சதவிகிதமாகக் குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

RBI takeaways
முக்கிய அம்சங்கள்

ரெப்போ வட்டி விகித குறைப்பு முடிவுக்கு நிதி கொள்கைக் குழுவில் உள்ள 4 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை ஆய்வுக்கூட்டம் வரும் ஜூன் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 4, 2019, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.