நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் நிதிநிலை அறிக்கை மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கை குறித்த விளக்க விழாவில் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சரக்கு மற்றும் சேவை வரி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, “ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தொடர்ச்சியாக மாற்றம் கொண்டுவருவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகியுள்ளது எனவும் இதன் காரணமாக வணிகர்கள் வரிவிதிப்பதிலும் அவர்களுக்கு நிலுவைத்தொகை அளிப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன” எனத் தெரிவித்தார்.
மேலும், “இதனை தவிர்க்கும் பொருட்டு இனி ஓராண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மாற்றம் கொண்டுவரப்படும்” எனத் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அரசு முதலீட்டுத் திட்டத்திற்காக ஒரு லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாகவும், வரும் 2024-25ஆம் ஆண்டுக்குள் மோடி அரசின் கனவு இலக்கான ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் நிச்சயம் எட்டப்படும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸால் பாதிப்படையும் இந்திய மருத்துவச் சந்தை