ETV Bharat / business

மோடியின் அரசியல் நோக்கங்கள் பட்ஜெட்டில் வெளிப்பட்டதா? - நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2020

ஐதரபாத்: வேலையின்மை, பொருளாதார மந்தநிலை போன்ற முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் பட்ஜெட் 2020-21இல் உள்ளதா என மூத்த ஊடகவியலாளர் சேகர் ஐயர் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Modi
Modi
author img

By

Published : Feb 15, 2020, 11:07 PM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், பிரதமர் மோடியின் அரசியல் நோக்கங்கள் மறைந்திருக்கிறது. நிர்மலா சீதாராமனின் இந்த பட்ஜெட் பொருளாதாரத்துக்கு தேவையாக ஊக்கமளிக்கும் விதத்தில் இல்லை. கனவு பட்ஜெட்டுக்கு செய்ய வேண்டிய விஷயங்களையும் அவர் தவிர்த்துள்ளார். இதனால், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 1991ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களையோ அல்லது அதை விட நல்ல சீர்திருத்தங்களையோ கொண்டு வர நிர்மலா சீதாராமனிடம் பிரதமர் மோடி எதிர்பார்த்ததாக அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். குறைந்த அளவு வரி விலக்கு அளிப்பதன் வழியாக ரூ. 40,000 கோடி வரை இழக்க மத்திய அரசு தயாராக இருந்தது.

அதேபோல், sovereign wealth funds வைத்திருக்கும் வெளிநாட்டு அரசுகள் இந்தியாவின் உள் கட்டமைப்புகளில் முதலீடு செய்தால் 100 சதவிகித வரி விலக்கு அளிக்கவும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதேபோல், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் வெளிநாடுகளுக்கு Dividend Distribution Tax- ஐயும் கைவிடுவதன் மூலம் ரூ.22,000 கோடியையும் இழக்க மோடி அரசு முன் வந்துள்ளது. இதனால், நாட்டின் உள் கட்டமைப்பு விவகாரங்களில் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இந்தியாவின் உள் கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்தில் மேம்படுத்த ஒரு டிரில்லியன் டாலர் அதாவது ரூ. 70 லட்சம் கோடி தேவைப்படும். அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தத் தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, விவாட் சே விஷ்வாஷ் திட்டத்தின் கீழ் 4.90,000 நிதி மற்றும் வரி தொடர்பான வழக்குகளை அபராதத்துடன் வட்டி விதித்து மன்னிப்பு அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் தலைப்பு செய்தி என்பது , தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரி சட்டத்தை எளிமைபடுத்தியதுதான். புதிய மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி திட்டம் புதிய நிச்சயம் ஒரு சகாப்தம் போல. ஏராளமான வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோருக்கு வருமான வரி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டில் தற்போதுள்ள 70 வரி விலக்குகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பல வகையான கழிவுகளையும் நீக்க முன்மொழியப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வரி விலக்குகள் வரும் ஆண்டுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டு தேவையான அளவுக்கு வரி செலுத்தும் முறை எளிமைப்படுத்தப்படும். வரி விகிதமும் குறைக்கப்படும்.

நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதியதாக வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியிடப்படும். வங்கி மோசடிகள் அதிகரிப்பால் கவலையடைந்த நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களின் டெபாஸிட் இன்சூரன்ஸ் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரித்து வழங்க டெபாஸிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் வழங்கும் உத்திரவாத நிறுவனத்துக்கு (DICGC) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட அதிக நிதியால் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்று மோடி நம்புகிறார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் படித்த சில மணி நேரங்களில் சென்செக்ஸ் குறைந்தது. பிரதமர் மோடியோ... தொலை நோக்கு பார்வை மற்றும் அமல்படுத்தக் கூடிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி அடிப்படையில் உரிமை உறுதி செய்யப்படுகிறது கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் பட்ஜெட் இதுவென்று மோடி கூறினார். பிரதமரின் சிந்தனை எப்போதும் கிராமப்புறங்களின் மீதுதான் இருந்துள்ளது என்பதை இந்த பட்ஜெட் காட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல். இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் புதிய ஸ்டார்ட் அப் பிசின்ஸ்களை தொடங்கும் அம்சங்களும் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தன. எவ்வளவு வேலை வாய்ப்பை உருவாக்க முடியுமென்று இந்த பட்ஜெட் உறுதியாக சொல்லவில்லை. ஆனால். மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் இருவருமே வேளாண்மை, உள் கட்டமைப்பு, டெக்ஸ்டைல், தொழில் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமென்று நம்புகிறார்கள். நாட்டின் வேலை வாய்ப்புகளை நம்பி ஒரு தலைமுறை உருவாகிறது. அவர்களுக்கு இந்த நான்கு துறைகளும்தான் வேலை வாய்ப்பை அளிக்க முடியும். உடான் திட்டத்தின் கீழ் 2024- ம் ஆண்டுக்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அது போல், தனியார் துறைக்கு 150 ரயில்களை தாரை வார்ப்பதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் மோடியின் விருப்பங்களுக்கு நிர்மலா முக்கியத்துவம் கொடுத்துள்ளார். நமது பிரதமர் நல்ல வாழ்க்கைக்கும் அனைத்து தரப்பு மக்களும் இலக்கை எட்டுவதற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரும் 2020-21ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.15 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிஷான் ரயில், விரைவில் அழுகி விடக் கூடிய வேளாண் பொருள்களை பாதுகாக்க குளிர் பதனச் சாதனங்கள் கடன் உதவி பெற ' கிருஷி உதான்' திட்டம். சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 'குசூம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் விவசாயிகளன் நலனை கருத்தில் கொள்ளப்பட்டு கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.

இந்த பட்ஜெட் அறிவிப்பின் போது மத்திய அரசுக்கு பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய் புதிய தேசிய வேலை வாய்ப்பு முகமை (NRA)அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்த போது மோடி வெற்றி பெற்றது போன்ற ஒரு மனநிலையில் இருந்தார். அரசு பணியாளர்களை தேர்வு செய்வதை இந்த புதிய நிறுவனம் ஒழுங்குமுறைப்படுத்தும். அரசு பணிகளுக்காக பல்வேறு தேர்வுகளை எழுதுவதை விட ஒற்றை சாளர முறையிலான ஆன்லைன் தேர்வு முறை கடைபிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். தனித்தன்மையுடன் கூடிய இந்தியாவை உருவாக்குவதே பிரதமரின் கனவு. அதையே நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட்டில் வெளிப்படுத்தியுள்ளார். தனித்தன்மையுடன் கூடிய இந்தியா என்பது உயர்ந்த வாழ்க்கைத் தரம் தேவையான செல்வத்துடன் நல்ல கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற்று வாழ்வது என்பது. மோடியின் எண்ணமும் இதுதான். நாட்டில் இந்த மூன்றும் உருவானால், லஞ்ச லாவண்யங்கள் ஒழியும். அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும். நாட்டின் நிதி நிலை சீரடையும் அல்லது நல்ல நிலையை எட்டும்.

உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்த, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்காக இறக்குமதிக்கு தடை விதிக்கவோ அல்லது சுங்க வரியை அதிகரிக்கவோ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சீன நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் குறையும். இந்திய நிறுவனங்கள் மூடப்படாமல் பாதுகாக்கப்படும். ஆனால், இந்தியாவை மற்ற நாடுகள் சுயநலக்காரனாக பார்க்கலாம். ஆனால், இந்திய வர்த்தகத்தை காக்க என்ன விலையானாலும் கொடுத்தே ஆக வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: வளர்ச்சிக்கான ஒன்றா அல்லது வாக்குக்கான ஒன்றா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.