மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளையும் பாராட்டுகளையும் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, “தொலைநோக்குப் பார்வையும், அதற்கான செயல்திட்டமும் கொண்ட இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் மற்றும் அவரது குழுவினருக்கு எனது பாராட்டுகள்.
நாட்டின் வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியத் துறைகளான விவசாயம், உள்கட்டமைப்பு, ஜவுளித்துறை, தொழில்நுட்பத்துறைகளில் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. இது தற்கால சந்ததியினரின் வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும்.
நாட்டில் புதிதாக 100 விமான நிலையங்கள் அறிவிக்கப்படும் என்ற திட்டம் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும்.
ஏற்றுமதி முதலீட்டை ஊக்குவிக்க புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பது புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும். மாவட்டம் முழுவதும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய முன்னெடுப்பாகும். வருமான வரிக்குறைப்பு என்பது நடுத்தர மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் முக்கிய அறிவிப்பாகும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘பாஜகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்படி ஒரு பட்ஜெட்டா?’ - ப. சிதம்பரம் ஆதங்கம்