டெல்லி: சரக்கு சேவை வரிக்குள் (ஜிஎஸ்டி) பெட்ரோலியப் பொருள்களைக் கொண்டுவருமாறு பல தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வருகின்றன. அவை சாத்தியமானால் எரிபொருள்களின் சில்லறை விலை குறைய சாத்தியக் கூறுகள் உள்ளன.
மத்திய மற்றும் மாநிலங்கள் நிர்வகிக்கும் தற்போதைய இரட்டை வரி ஆட்சியின் கீழ், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வரிகளாக விதிக்கப்படுகின்றன. இந்த இரண்டு பொருள்களும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டால், ஜிஎஸ்டியின் தற்போதைய நான்கு அடுக்கு கட்டமைப்பின் கீழ், இவை இரண்டுக்கும் அதிகபட்சம் 28 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்களக்கிழமை (மார்ச்15) தெளிவுபடுத்தினார். அப்போது, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) ஆகிய ஐந்து பொருள்களை சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவரவில்லை.
மேலும், இதில் மத்திய- மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும். இதுவரை, மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜிஎஸ்டி கவுன்சில், இந்தப் பொருள்களை ஜிஎஸ்டியின் கீழ் சேர்க்க எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அவரது பதவிக்காலத்தில், மத்திய மற்றும் மாநிலங்கள் விதித்த பெரும்பாலான மறைமுக வரிகளை வசூலிக்க அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோலிய பொருள்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்தது, ஆனால் அமல்படுத்தப்பட வேண்டிய தேதியை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு விட்டுவிட்டது. ஆகவே, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்குள் ஐந்து பெட்ரோலிய பொருள்களை (பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, ஏ.டி.எஃப் மற்றும் கச்சா எண்ணெய் சேர்ப்பது குறித்து ) தகுந்த நேரத்தில் பரிசீலிக்கக்கூடும்” என்றார்.
மேலும், “தற்போது, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், ஏடிஎஃப் மற்றும் இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் எதுவும் இல்லை" என்றும் தெளிவுப்படுத்தினார்.
ஒரு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரம்
நுகர்வோர், வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து விலையை குறைக்கக்கோரி கடுமையான கோரிக்கைகள் இருந்தபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி சுமையை குறைக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. இதேபோல், பெட்ரோலிய பொருள்களின் விற்பனையிலிருந்து வருவாயில் தங்கள் பங்கைத் தவிர்ப்பதற்கு மாநிலங்களும் சிறிதளவு தளர்வை காட்டியுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலை கடந்த ஒரு வருடத்தில் லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.20 உயர்ந்துள்ளது. அதேபோல், உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ரூ.100 உயர்ந்துள்ளது. 2019-20 நிதியாண்டில், பெட்ரோலியத் துறை மீதான வரிகளிலிருந்து மத்திய அரசு ரூ.2,87,540 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இது ஏற்கனவே ரூ.2,63,351 கோடியாக இருந்தது.
இதேபோல், கடந்த நிதியாண்டில் மாநிலங்கள் ரூ.2.21 லட்சம் கோடிக்கும், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.1.45 லட்சம் கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தன. கருவூலத்திற்கு (மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் அரசு) பெட்ரோலியத் துறையின் மொத்த பங்களிப்பு 2016-17 முதல் 2019-20 வரை ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம் கோடி ஆகும்.
முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசலின் அதிக சில்லறை விலைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது ஒரு சிக்கலான குழப்பம் ஆகும். இந்தப் பிரச்சினையை தீர்க்க மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார். மேலும், “15ஆவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வின் கீழ் மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு மாற்றப்படுவதால், கலால் வரியை மத்திய அரசு குறைத்தால், மாநிலங்கள் பாதிக்கப்படலாம்” என்றார்.
இதையும் படிங்க : நிதி வழங்காமல் கூட்டாட்சி பற்றி பேசுவதா? - மோடிக்கு கனிமொழி கண்டனம்!