ETV Bharat / business

நிதிச்சுமையில் திணறும் 'பிஎஸ்என்எல் - தனியாருக்கு விற்கும் எண்ணம் இல்லை!

டெல்லி: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

BSNL
BSNL
author img

By

Published : Mar 13, 2020, 1:28 PM IST

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பல ஆண்டுகளாக நிதிச்சுமையில் சிக்கித் தவித்துவருகிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகளை செய்துவரும் மத்திய அரசு, விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தது. இதையடுத்து சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுப்பெற்று சென்றனர்.

இந்த அறிவிப்பால் ஊழியருக்கான சம்பளத்தினால் ஏற்படும் நிதிச்சுமைக் கட்டுப்படுத்தப்பட்டது. அதேவேளை பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதால், பிஎஸ்என்எல் தனியாருக்கு விற்கப்படுமா என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்துவந்த நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி., எழுப்பிய கேள்விக்கு தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே பதிலளித்துள்ளார்.

அதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிலவிவரும் நிதிநிலைமையை அரசு தீவிரமாகக் களைந்துவருகிறது. விரைவில் சிக்கலுக்குத் தீர்வுகாணப்படும். எனவே, நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல்க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைந்து அளிக்கவேண்டும் என அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதையும், எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டன.

இதையும் படிங்க: பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கம் விலை குறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.