டெல்லி : Budget session 2022: நாட்டின் வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) பிப்.1ஆம் தேதி தாக்கல் ஆகிறது. முன்னதாக இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது, “நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிவருகிறது. இதை முன்னிட்டு நாடு முழுக்க ஆஸாதி கா அம்ருத் மகோத்ஸவ் (சுதந்திர கொண்டாட்டங்கள்) ஓராண்டுக்கு நடைபெற்றன. கோவிட் பெருந்தொற்று எதிராக கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் நாம் முன்னேறிவருகிறோம். நாட்டில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெரியோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வருகிறது. நாடு முழுக்க 23 கோடி மக்கள் (e-SHRAM) அமைப்பு சாரா தொழிலாளர்கள் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, “சிறு குறு தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்றனர்” என்றார்.
மேலும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டம், முத்தலாக் தடை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை மற்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான திட்டம் ஆகியவற்றையும் ராம் நாத் கோவிந்த் வெகுவாக பாராட்டினார்.
இதையும் படிங்க : Union Budget App: காகிதமில்லா நிதிநிலை அறிக்கை!