ETV Bharat / business

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி மேலும் குறையும்

author img

By

Published : Mar 17, 2020, 2:21 PM IST

கரோனா வைரசால் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரிவைச் சந்திக்கும் என சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடீஸ் கணித்துள்ளது.

ஜி.டி.பி
ஜி.டி.பி

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. உலகப் பொருளாதார பெருஞ்சக்திகளான சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் கரோனா வைரசால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்கா பொருளாதாரச் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலும் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு அபாயம் அதிகரித்துவருகிறது. இதையடுத்து இந்தியாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பைச் சந்திக்கும் என சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடீஸ் எச்சரித்துள்ளது.

வரும் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.8 விழுக்காடாக இருக்கும் என கணித்திருந்த மூடீஸ் தற்போது அதை 5.3 விழுக்காடாக குறைத்து கணித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் வங்கித் துறை கடும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரசின் தாக்கமும் இந்தியச் சந்தையை வெகுவாகப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியப் பொருளாதாரம் வரும் நாள்களில் மேலும் சரிவைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கையை மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: உங்கள் பணம் பத்திரமாக உள்ளது- சக்திகாந்த தாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.