டெல்லி: இந்தியாவில் பல துறைகளில் மேற்கொள்ளவிருந்த 200 சீன முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை மத்திய உள்துறை அமைச்சகம் கிடப்பில் போட்டுள்ளது.
அண்மையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு புதிய விதிகள் அமலுக்கு வந்தது. அதன்படி, தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) அறிமுகப்படுத்திய புதிய விதிகளைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது.
மக்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாக்க தனிப்பட்ட ‘தரவு பாதுகாப்புச் சட்டம்’
ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட டிபிஐஐடி உத்தரவில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்ற பின்னரே உள்நாட்டில் முதலீடு செய்ய முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டன.
ஏப்ரல் முதல் சீன முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 200 திட்டங்கள் வந்துள்ளன. அம்முதலீடுகளில் ஊடகங்கள், தொலைத்தொடர்பு, பாதுகாப்பு துறை ஆகியவை அடங்கும்.
கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் 'டோனட் பொருளாதாரம்' ஏன் முக்கியமானது?
இவை அனைத்தையும் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இந்தியா தற்போது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி சலுகைகளை அளித்து வருவது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.