ETV Bharat / business

கரோனா காரணமாக அதிகம் வேலையிழந்தவர்கள் இந்த வயதுடையவர்கள்தான் - ஆய்வு முடிவுகள் வெளியீடு - கரோனா பொருளாதார நெருக்கடி

கரோனா பரவலால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, 20-29 வயதுடையவர்கள்தான் அதிகம் வேலையிழந்துள்ளதாக சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியின் எகானமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

India's young workforce bearing maximum brunt of job losses

author img

By

Published : Aug 28, 2020, 5:16 PM IST

இந்தியாவின் இளம் உழைக்கும் வயதுடையவர்கள், குறிப்பாக 30 வயதிற்குட்பட்டவர்கள், தற்போது கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள வேலையிழப்புகளால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியின் எகானமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஏற்பட்ட வேலையிழப்புகளில், 20 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள்தான் 81 விழுக்காடு வரை வேலையிழந்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

”20-24 வயதுடையவர்கள் நாட்டிலுள்ள மொத்த வேலைவாய்ப்புகளில் ஒன்பது விழுக்காடு வரை உள்ளனர். ஆனால், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வேலையிழப்புகளில் 35 விழுக்காடு வரை வேலையிழந்தவர்கள் இவர்கள்தான்” என்று சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியின் எகானமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொடக்கத்தில் அனைத்து வயதுடையவர்களும் வேலையிழந்தனர். ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் வயது வரம்புகளின்றி சீரற்ற முறையில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது,

மே மாதத்தில் வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து வயதுடையவர்களும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், 25-29 வயதுடையவர்களைத் தவிர!

கடந்த ஜூன் மாதம், வேலைவாய்ப்புச் சந்தையில் வியக்கதக்க முன்னேற்றம் இருந்தது. அனைத்து வயதுடையவர்களும் வேலைவாய்ப்பு பெற்றனர். இருப்பினும், ஜூலை மாத வேலைவாய்ப்புச் சந்தையில் மிகக் குறைந்த அளவே முன்னேற்றம் இருந்தது.

ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த வேலையிழப்புகள் குறைந்துவிட்டாலும், 25 முதல் 34 வயதுடையவர்களும், 50களின் முற்பகுதியில் உள்ளவர்களும் வேலையிழப்புகளை எதிர்கொண்டனர்.

India's young workforce bearing maximum brunt of job losses
வயது வாரியாக வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை

இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பணிபுரிந்த சுமார் 4.8 கோடி பேர் 50களின் முற்பகுதியில் இருந்தவர். அவர்களில் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். அதேபோல, வேலைவாய்ப்புச் சந்தையில் பணிபுரிந்த சுமார் 8.8 கோடி பேர் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 9.8 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பொருளாதாரம் நல்ல முறையில் வளர்ச்சியடையும்போது, கூடுதல் தேவை என்பது இளம் வயதுடையவர்களால் பூர்த்தி செய்யப்படும். ஆனால், தற்போது பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் மந்தமாகவுள்ளதால் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டதட்ட உருவாகாமலேயே போயுள்ளதாக சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியின் எகானமிக்ஸ் தெரிவித்துள்ளது

இதையும் படிங்க: நகரங்களில் கோடிக்கு மேல் காலியாக இருக்கும் வீடுகள் - வீட்டுவசதி செயலர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.