ETV Bharat / business

கரோனா: இந்தியாவுக்கு தேவை சீரான பொருளாதார வரைவு - இந்தியா வேலையின்மை

உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனாவை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் சீரான பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவும் சீரான பொருளாதார முன்னெடுப்பை எடுக்க வேண்டிய நேரம் இது.

ECONOMY
ECONOMY
author img

By

Published : Apr 18, 2020, 11:52 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் முக்கிய கட்டத்தை இந்தியா தற்போது எட்டியுள்ளது. வரலாறு காணாத வகையில் 130 கோடி இந்திய மக்களை சுமார் 40 நாட்கள் முடக்கிபோட்டுள்ளது லாக்டவுன் அறிவிப்பு.

பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி இத்தகைய சவாலான சூழலில் வரும் நாட்களில் முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுன் அறிவிப்பின் போது இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 523ஆக இருந்த நிலையில், தற்போது அது 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மத்திய அரசின் கூற்றின்படி லாக்டவுன் அறிவிப்பின் மூலம் நோய் தீவிரம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, சுகாதார சிக்கல் தற்போதைய சூழலில் தடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கை கொண்டிருந்த மாநிலமான கேரளாவில், வைரஸ் வெகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது கவலைக்குரியதாகும். வைரஸ் பாதிப்பை முறியடிக்கும் விதமாக மாநில அரசுகள் வைரஸ் தீவிரமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கடும் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றன.

மாநில முதலமைச்சர்களுடன் காணொலிகாட்சி மூலம் நடத்திய ஆலோசனையில் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். அனைத்து மாநில முதலமைச்சர்களும் லாக்டவுன் அறிவிப்பை நீட்டிக்க ஆதரவு தெரித்த நிலையில், நிதி விவகாரம் குறித்தும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் ஏழை மக்களை பாதுகாக்க பிரதமர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

1930ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக மந்த நிலைக்கு சமமான பொருளாதார சரிவை உலகம் தற்போது எதிர்கொண்டுள்ளது. விவசாயம், தொழிற்துறை, சேவை என அனைத்து துறைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக 86 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்தச் சூழலை எதிர்கொள்ள உலக நாடுகள் இதுவரை 12 லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கியுள்ளன.

பிரதமர் மோடி இதுவரை 1.70 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இந்த தொகையானது இந்திய பொருளாதாரத்தில் 0.8 விழுக்காடு மட்டுமே. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறை மட்டும் ஒரு லட்சம் கோடி இழப்பீட்டை சந்தித்துள்ளது.

சிறுகுறு தொழில்துறை இந்த பேரிடரில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 87 விழுக்காடு வேலைவாய்ப்பு முறைசார தொழிலைச் சார்ந்துள்ளது. இவர்களுக்கு எவ்வாறு சம்பளம் தரப்போகிறோம் என தொழில்துறை தவித்துவருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய அரசு பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய நேரம் இது. மக்களின் வாழ்வாதாரத்தை சீர் செய்ய முக்கிய பொருளாதார அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். பிக்கி மற்றும் பொருளாதார வல்லுநர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து மத்திய அரசு முடிவெடுப்பதே தற்போதைய தேவை.

இதையும் படிங்க: இங்கிலாந்தின் நிறுவனத்தை வாங்கிய டிவிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.