வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்கள் தங்களது சொந்த நாட்டில் வசிக்கும் குடும்பம், உறவினர் ஆகியோருக்கு அனுப்பும் தொகை ரெமிட்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரெமிட்டன்ஸ் தொகையை ஆண்டுதோறும் கணக்கிட்டு அறிக்கையாக உலக வங்கி வெளியிடுகிறது. அந்த வகையில் 2018ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ரெமிட்டன்ஸ் தொகை குறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டில் வெளிநாட்டு குடிமக்களால் அதிக தொகை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
2018ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சுமார் 5.46 லட்சம் கோடி ரூபாய் தொகையை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பின்படி 2017 ஆம் ஆண்டு 65.3 பில்லியன் டாலராக இருந்த ரெமிட்டன்ஸ் தொகை 2018 ஆம் ஆண்டில் 79 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா 67 பில்லியன் டாலரும், மெக்ஸிகோ 36 பில்லியன் டாலரும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டாலரும் ரெமிட்டன்ஸ் தொகையாகப் பெற்றுள்ளன.