கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும் பொருளாதார பிரச்னைகள் பற்றி உலக வங்கியும், சர்வதேச நிதியமும் சில நாள்களுக்கு முன்னதாக அறிக்கை தாக்கல் செய்தன. அதில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி இந்த ஆண்டில் 1.9 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்திருந்தன.
கிட்டதட்ட 1930ஆம் ஆண்டுக்கு பின் உலக பெரும் பொருளாதார பின்னடைவு இந்த ஆண்டில் தான் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 1991ஆம் ஆண்டில் ஏற்பட்ட தாராளமயமாக்கலுக்கு பின் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் கூறுகையில், ''உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்தியாவின் வளர்ச்சி பற்றி அளித்துள்ள அறிக்கை நம்பிக்கையளிக்கும்விதமாக உள்ளது. ஏனென்றால் கடந்த ஒரு மாதமாக உற்பத்தி எதுவும் நடைபெறாததால், நாம் நமது நாட்டின் வளர்ச்சியை குறைத்தே மதிப்பிட்டோம். அதேபோல் இந்த சூழலை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பதும் முக்கியமானது.
கடந்த ஆண்டை மதிப்பிடுகையில், இந்த ஆண்டிற்கான வருவாய் குறைந்தே இருக்கும். அதன் இழப்பு ஜிடிபி வளர்ச்சியில் 1.5 சதவிகிதமாக இருக்கும்'' என்றார்.
இதையும் படிங்க: சரிவுடன் தொடங்கிய நிதியாண்டு - கலக்கத்தில் முதலீட்டாளர்கள்