ETV Bharat / business

ஜி.எஸ்.டி கவுன்சிலில் மாநிலங்களின் ஒற்றுமையை குலைத்ததா பிகார்? - மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாலான மாநில அரசுகள் மத்திய அரசின் கடன் வாங்கும் திட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிகார் மட்டும் ஆதரவு தரும் விதமாக கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

GST
GST
author img

By

Published : Aug 29, 2020, 4:54 PM IST

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம், கடந்த வியாழக்கிழமை (ஆக.27) நடந்தபோது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு திட்டங்களை முன்வைத்தார். இந்த ஆண்டின் வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்க தேவைப்பட்டால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநிலங்கள் இரண்டு முறைகளில் கடன் பெறலாம் என்று கூறினார்.

நிதி அமைச்சரின் இந்தத் திட்டங்களைக் கேட்டு எதிர்கட்சிகள் ஆளும் பல மாநில அரசுகள் ஆத்திரம் அடைந்தன. கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் மன்ப்ரீத் பாதல் ஆகிய இருவரும் பொது வெளியிலேயே, நிதி அமைச்சர் தெரிவித்த கடன் பெறும் திட்டம் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தனர்.

இவ்விவகாரம் குறித்து அறிந்த சிலர் கூறுகையில், மொத்த கூட்டத்திலும் பிகார் மாநிலம்தான் கடன் வாங்குவது குறித்து கூட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே விருப்பம் தெரிவித்து வந்தது. ஆனால், இதர மாநிலங்கள் எல்லாம் அரசியல் சட்ட உறுதியின்படி தங்களுக்கான ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுதான் கடனாக வாங்கித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் தொடக்கத்தில் நடந்த விவாதம் குறித்து, ஈடிவி பாரத்துக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின்படி, வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் தொகையை கடனாக வாங்க சம்மதம் தெரிவிப்பதாக பிகார் கூறியது. இதர மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன என்று கூறப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக, காணொலி காட்சி வழியே 41ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அரசியல் சட்டம் உறுதி அளித்துள்ள ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசு தமது பொறுப்பில் கடன் பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததாகக்கூறினார். “சில மாநிலங்கள் ஆரம்பத்தில் மத்திய அரசு கடன் பெற்றுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

அப்போது உண்மையான பற்றாக்குறை மற்றும் பலவற்றைப் பற்றி விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது நான் இரண்டு வழி முறைகள் பற்றி மாநிலங்களிடம் முன் வைத்தேன். என்னுடைய விருப்பங்கள் இரண்டும் உண்மையோடு தொடர்புடையவை. மாநிலங்கள்தான் கடன் பெற வேண்டும்” என்றார்.

அரசியல் சட்டம் மற்றும் சட்ட கடமையை நிறைவேற்றும் வகையில், ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய அரசு தான் கடனாகப் பெற்றுத் தர வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தது உண்மைதான் என்பது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இவ்விவகாரத்தில் மத்திய அரசு கடன் பெறுவதை விடவும், மாநில அரசுகள் கடன் பெறுவதுதான் விரும்பத்தக்கதாக இருக்கும் என்று நாங்கள் மாநிலங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னோம். தவிர மாநிலங்கள் கடன் வாங்கும்போது, சந்தையில் ஒருவித கூச்சலும், மக்கள் கூட்டமும் நிலவும் பட்சத்தில் அதற்குப் பதிலாக ரிசர்வ் வங்கியின் மூலம் மாநில அரசுகள் கடன் வாங்கும் செயல் முறையை மத்திய அரசு எளிதாக்கும்” என்றார் நிர்மலா சீதாராமன்.

ஜி.எஸ்.டி (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டம் 2017-ன்படி. முதல் ஐந்து ஆண்டுகால வரி மாற்ற காலத்தில் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் வசூலிப்பில் எந்த ஒரு இழப்பு ஏற்பட்டாலும், அதனை மாநிலங்களுக்கு இழப்பீடாகக் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களின் வரி வருவாய் வசூலிப்பில் எந்த ஒரு பற்றாக்குறை நிலவும் பட்சத்தில், அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கும் மத்திய அரசானது இதனை ஈடுகட்டும் நோக்கத்துக்காக இதர ஆடம்பர பொருட்கள் மற்றும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் பாவ வரி (புகையிலை மற்றும் மது ,சூதாட்டம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரி பாவ வரி எனப்படுகிறது) ஆகியவற்றை ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை சேகரித்து மாநிலங்களுக்குத் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருவாய்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே இது குறித்து கூறுகையில், “நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை என்பது ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கிறது. மத்திய அரசு, ஜி.எஸ்.டி இழப்பீடு நிலுவையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்குகிறது.

எனவே, இத்தொகை ஏற்கனவே நிலுவையில் இருக்கிறது. அரசின் கணிப்பின்படி இந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையின் தேவை என்பது ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும்” என்றார்.

மாநிலங்களின் வரி வருவாய் வசூலின் மொத்த பற்றாக்குறை 3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், மத்திய அரசின் தோராயமான மதிப்பின்படி இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூலிப்பு வெறும் 65 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மாநிலங்களின் முன்பு இரண்டு விருப்பங்களை முன் வைத்துள்ளது.

அதன்படி ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணங்களுக்காக மட்டும் வருவாய் வசூலில் ஏற்பட்ட பற்றாக்குறையை சரி செய்ய மாநிலங்கள் மொத்தமாக 97,000 கோடி ரூபாயை கடனாகப் பெறலாம். இல்லையெனில், இந்த ஆண்டு மாநிலங்கள் தங்களின் வரிவசூலில் மொத்தமாக ஏற்பட்ட பற்றாக்குறையை சரி செய்ய மொத்தமாக 2.35 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெறலாம். கரோனா தொற்று நோயின் மோசமான பொருளாதாரத் தாக்கத்துக்கு இந்த ஒரு பகுதியே காரணமாகும்.

இதற்கிடையே மாநிலங்கள் சார்பில், இரண்டு விருப்பங்கள் குறித்தும் விரிவாக ஒரு படிவத்தில் தங்களுக்குத் தரும்படியும் அதனை ஆய்வு செய்து விட்டு ஏழு வேலை நாட்களுக்குள் திரும்பவும் மத்திய அரசிடம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. “அதன் பின்னர் மீண்டும் சிறியளவில் ஒரு ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பு நடைபெறும்,” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆர்டர் இல்லை, வேலையாள்கள் இல்லை; தலைக்கு மேல் தொங்கும் கடன் - கலக்கத்தில் நிறுவனங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.