செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு, சேவை வரி வசூல் நிலவரம் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதத்தில் நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.95 ஆயிரத்து 480 கோடியாக உள்ளது. அதில், மத்திய ஜி.எஸ்.டி வசூல் ரூ.17 ஆயிரத்து 741 கோடியாக உள்ளது.
மாநில ஜி.எஸ்.டி. வசூல் ரூ.23 ஆயிரத்து 131 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.47 ஆயிரத்து 484 கோடியாக உள்ளது.
மேலும் செஸ் வரி வசூல் ஏழு ஆயிரத்து 124 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் 4 விழுக்காடு வரி உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் மாத லாக்டவுன் அறிவிப்புக்குப்பின் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், செப்டம்பர் மாதத்தில்தான் இந்த வருடத்திற்கான அதிக ஜி.எஸ்.டி வசூல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் தொகையானது ரூ.86 ஆயிரத்து 449 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரத் பெட்ரோலியத்தை தனியார் வாங்க காலக்கெடு நீட்டிப்பு