டெல்லி: கல்வி நிறுவனங்கள் வாயிலாகத் தாக்கல் செய்யும் காப்புரிமைக் கட்டணத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.
தற்போது, காப்புரிமைத் தொகையில் 80 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக புதிய காப்புரிமை (திருத்தம்) விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என தொழில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுவாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, கண்டுபிடிப்பாளர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் இந்த நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கான காப்புரிமை கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது.
எனவே, அதிக எண்ணிக்கையில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், காப்புரிமை கட்டணத்தை கணிசமாகக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'வான்வழியாகவும் இனி மருந்துகளை பெறலாம்... தெலங்கானாவில் புதிய முன்னெடுப்பு!