தலைநகர் டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்துகொண்டார். அப்போது விவசாயிகளின் வருமானத்தை கருத்தில் கொண்டு கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கோதுமைக்கான ஆதார விலை ரூ.85 லிருந்து ரூ.1,925 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருப்புவிலை குவிண்டாலுக்கு ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விவசாயிகளின் வருமானத்தை கவனத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விலை உயர்வு நடப்பு பருவ காலத்திலே விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வடஇந்தியாவில் கோதுமை நுகர்வு அதிகமாகவுள்ளது. கோதுமை பயிர் விளைச்சல் பருவக்காலம் அடுத்த மாதமே தொடங்குகிறது. ஆகவே அடுத்த மாதம் முதல் கோதுமை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானுக்கு 75 ஆயிரம் டன் கோதுமையை பரிசளிக்கிறது இந்தியா!