2019-2020ஆம் நிதி ஆண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளிலேயே மிகக்குறைந்த அளவிலான 4.5 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஜூலை- செப்டம்பர் மாத காலகட்டத்தில் பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது புள்ளியியல் துறை அமைச்சகம் இந்த மதிப்பீடைக் கணித்து வெளியிட்டுள்ளது.
இந்தக் கணிப்பீடுகள் பெஞ்ச் மார்க் இண்டிகேட்டர் எனும் முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களின் தொழில்துறை உற்பத்தி அட்டவணை மதிப்பீடுகள், செப்டம்பர் மாதம் வரையிலான குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் செயல்திறன், பயிர் உற்பத்தியின் கணிக்கப்பட்ட மதிப்பீடுகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகள், வரவு, செலவு குறிப்புகள், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், ரயில்வேத் துறை ஆகியவற்றின் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சரக்கு வருவாய், நாட்டின் வாகன விற்பனை ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1, 2017 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக வரிக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களாலும், இந்த மதிப்பீட்டில் மொத்த வரி வருவாயில், ஜிஎஸ்டி அல்லாத வருவாயும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர சி ஜி ஏ (Controller General of Accounts) வெளியிட்டுள்ள 2019-20 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீடுகள், பொருட்களின் தற்போதைய விற்பனை விலையின் மீது வரிகளைக் கணக்கிடுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதையும் படிங்க: 'ஜிடிபி' வளர்ச்சிக்கான குறியீடா? ஒரு பார்வை