டெல்லி : நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கை நாளை (பிப்.1) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey 2021-22) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.31) மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில், 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) இந்தியப் பொருளாதாரத்தின் 8 முதல் 8.5 சதவீத வளர்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) கணித்த 9.2 சதவீத GDP விரிவாக்கத்துடன் ஒப்பிடுகிறது.
தொடர்ந்து மக்களவை கூட்டத்தொடர் நாளை (பிப்.1) வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன. 31) காலை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜன.31 முதல் பிப்.11ஆம் வரையிலும், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Budget session 2022: ஆனந்த நாகேஸ்வரன் இன்று செய்தியாளர் சந்திப்பு!