ETV Bharat / business

'வரும் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.8% ஆக சரியும்'

டெல்லி: கரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியான ஜிடிபி குறியீடு வரும் நிதியாண்டில் 0.8 விழுக்காடாகச் சரியும் என ஃபிட்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

GDP
GDP
author img

By

Published : Apr 23, 2020, 2:41 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகளின் இயல்புநிலை முற்றிலுமாக முடங்கியுள்ளது. உலகின் முன்னணி பொருளாதார பெரும் சக்திகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகள் கரோனா வைரசால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இதன் விளைவாக உலகில் பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், கரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது.

2020ஆம் நிதியாண்டில் 4.9 விழுக்காட்டிலிருந்த இந்தியப் பொருளாதாரம், 2021ஆம் நிதியாண்டில் 0.8 விழுக்காடாகக் குறையும் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவின், தொழில் துறை, வங்கித் துறை சிக்கல், சந்தை பணப்புழக்கம் கடும் சரிவை சந்தித்துவரும் நிலையில் தற்போது, கரோனா வைரசின் தாக்கமும் இந்தியச் சந்தையை வெகுவாகப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகப் பொருளாதாரமும் வரலாறு காணாத சரிவைச் சந்திக்கும் எனவும் இதன் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 3.9 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் எனவும் ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தள்ளாடும் ஜப்பானின் ஏற்றுமதிச் சந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.