ETV Bharat / business

"வெட்கிரைண்டர்களுக்கான வரிக்குறைப்பு" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

பானஜி: வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

வெட்கிரைண்டர்களுக்கான வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன்
author img

By

Published : Sep 20, 2019, 11:38 PM IST

கோவாவில் நடைபெற்ற 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சில அறிவிப்புகளை அறிவித்தார். அவை,

  1. கடல் எரிபொருள்கள் மீதான வரி 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், கல் குழவிகளைக் கொண்ட வெட் கிரைண்டர்களுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகவும், குறைக்கப்பட்டுள்ளது.
  2. 5 சதவிகித ஜிஎஸ்டி வரி இருந்த சமையல் புளிக்கான வரி முற்றிலும் நீக்கம்
  3. 2024ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான வரி நீக்கம்
  4. தங்கம் ஏற்றுமதிக்கான வரியும் நீக்கம்
  5. ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வாடகை கொண்ட ஹோட்டல் ரூம்களின் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை இருக்கும் ஹோட்டல் ரூம்களுக்கு 12 சதவிகிதமாகவும்; 7,500க்கும் மேல் உள்ளவைகளுக்கு 18 சதவிதமாகவும் குறைப்பு.
  6. இயற்கை இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கப்புகளுக்கான விலை குறைப்பு.

இந்த வரி குறைப்பு, நீக்கம் அனைத்தும் வரும் மாதம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக நாட்டின் பொருளாதார சிக்கலைச் சீர்செய்யும் விதமாக புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதில் கார்ப்பரேட் வரியை குறைப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.