ETV Bharat / business

பட்ஜெட் 2021-22! - ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு என்ன? - கரோனா

சென்னை: வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், வங்கிக்கடன், வரிச்சலுகைகள், பின்னலாடை ஆராய்ச்சி மையம், ஏற்றுமதியை அதிகரிக்கும் புதிய திட்டங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கி ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர்.

export
export
author img

By

Published : Jan 23, 2021, 7:20 PM IST

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கரோனா பரவலால் மிகப்பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நேரத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. உலக வணிகம் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், ஏற்றுமதியாளர்கள் இந்த பட்ஜெட்டை உற்றுநோக்கியிருக்கிறார்கள்.

இது பற்றி நம்மிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், "உலகளவில் இந்தியாவில் தான் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகளவில் உள்ளது. இதனால் இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, ஏற்றுமதியில் போட்டி போட முடியாத நிலையும் உள்ளது. இதனால் கூடுதலாக 2% வட்டி மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும். பின்னலாடை ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை நிறுவனங்கள் சார்பில் அரசே ஏற்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கினால்தான் இனி தொழிலையே தொடர முடியும்.

பருத்திக்கு ஈடாக பாலியேஸ்டர் போன்ற செயற்கை ரக பின்னலாடைகளையும் ஊக்குவித்தால் ஏற்றுமதி பன்மடங்கு அதிகரிக்கும். நீண்ட நாள் கோரிக்கையான, திருப்பூரில் பின்னலாடை தொடர்பான ஆராய்ச்சி மையம் அமைத்தால், மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்ப சிறிய நிறுவனங்களும் புதிய பொருட்களை கண்டுபிடித்து தயாரிக்க முடியும்" என்றார்.

வரவிருக்கும் பட்ஜெட்டில் நாட்டில் மெகா பின்னலாடை பூங்காக்களை நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதலமைச்சரும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் 2 பூங்காக்களை அமைக்க கோரியிருந்தார். ஆனால், இது தேவையற்றது என்கிற ராஜா சண்முகம், "சீனாவிலிருந்து தங்களது உற்பத்தியை இந்தியாவுக்கு கொண்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கவே, மத்திய அரசு மெகா பூங்காக்களை அமைக்கவுள்ளது. இதனால், ஓரிரு பெரு நிறுவனங்கள் மட்டுமே பயனடையும். திருப்பூரில் கூட்டுறவுடன் செயல்படும் ஏராளமான சிறிய வகை தொழிற்சாலைகளை வளர்க்கும்படியான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்கிறார்.

பட்ஜெட் 2021-22! - ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு என்ன?

ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு தொகையை மத்திய அரசே செலுத்த முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை, அனைத்திந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி குழுத் தலைவர் ரபீக் அகமது மெக்காவும் முன்வைக்கிறார். "தற்போது சந்தையில் தேவை குறைந்து, போட்டி கடுமையாக அதிகரித்துள்ள, அதே சமயத்தில் உற்பத்தி அதே அளவிலேயே உள்ளது. தமிழக ஏற்றுமதி 20% வரை சரிவடைந்துள்ளது. இதுபோன்ற நேரத்தில்தான் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கை கொடுக்க மத்திய அரசு வரிச்சலுகை வழங்குவது அவசியம்.

சீனா, வியட்நாம் உள்ளிட்ட போட்டி நாடுகளில் 6% வட்டியில் கடன் கிடைக்கும்போது, இங்கு கடன்களுக்கான வட்டி 12% ஆக உள்ளது. தமிழகத்திலிருந்து பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கு தான் அதிகளவிலான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. தொற்று காரணமாக கடைகளில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து பொருட்களையும் உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஏற்றுமதியாளர்களுக்கான அன்றாட செலவுக்கான நிதியை அரசு அதிகரிக்க வேண்டும், வங்கிகள் உடனடி கடன் வழங்க வேண்டும். மேலும், அரசு சந்தைப்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

கரோனா தொற்றால் பொருளாதார சரிவு ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், உலகளாவிய சீன எதிர்ப்பு மனநிலையால் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டங்களை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்றும், இதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எதிர்வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கின்றனர் சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்கள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.