இந்தியாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எவரெடி நிறுவனம் சில ஆண்டுகளாக நிதிச்சுமையில் சிக்கி தவித்துவருகிறது. அந்நிறுவனத்தின் நிதிச்சுமையைத் தீர்க்க ஐ.எல்.எப்.எஸ். (I.L.F.S) நடவடிக்கையின் மூலம் மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அந்நடவடிக்கை மேற்கொள்ள முட்டுக்கட்டை போடும் விதமாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அந்நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களில் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இத்தீர்ப்பினை அளித்துள்ளனர். இதன் காரணமாக நிறுவனத்தின் நிதிச் சிக்கல் தீர்வதற்கான வாய்ப்புகள் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பங்குச்சந்தையில் எவரெடி நிறுவனத்தின் பங்குகள் ஐந்து சதவிகிதத்திற்கு மேல் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நிறுவனத்தின் விலை 57 ரூபாயாகச் சரிவடைந்துள்ளது. குறிப்பாகக் கடந்த எட்டு மாதங்களில் எவரெடி பங்குகள் 75 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.