ETV Bharat / business

1991 நெருக்கடியைவிட வரும் நாட்கள் கடுமையானதாக இருக்கும் - மன்மோகன் சிங் - இந்தியப் பொருளாதாரம்

'கரோனா தாக்கத்தின் விளைவாக நாட்டில் கல்வியும், சுகாதாரமும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் மீட்சி பொருளாதார முன்னேற்றத்திற்கு இணையாக இல்லை. பெருவாரியான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் கருத்து
மன்மோகன் சிங் கருத்து
author img

By

Published : Jul 25, 2021, 10:58 AM IST

டெல்லி: இந்தியப் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இது மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் அல்ல. ஆனால், ஆராய்ந்து பார்க்க வேண்டிய நேரம். 1991ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியை விட, தற்போது முன்னோக்கி செல்லும் பாதை இன்னும் கடினமானது.

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தலைமையில் தாராளமயமாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை, இப்போது நான் நினைவுகூர்கிறேன்.

கவனமாக இருக்க வேண்டிய காலம்

கரோனா தொற்றால் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளின் காரணமாக, மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறேன்.

அதேபோல், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் ஒப்பிடும் போது, மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே, நாம் ஏராளமான உயிர்களை இழந்துவிட்டோம்.

எல்லாருக்கும் 1 லட்சம் ரூபாய்... கரோனா போனஸ் அறிவித்த மைக்ரோசாப்ட்

தற்போதைய பொருளாதாரச் சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிபடுத்தப்பட வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் ஆட்சி

1990-களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்தியப் பொருளாதாரத்தை, மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மீட்டெடுத்தன. மக்கள் வாழ்வாதாரத்திலும், தொழில் துறைகளிலும் மிகப்பெரிய மாற்றங்கள் காணப்பட்டன.

மேலும், இந்தியாவின் உற்பத்தி, சேவை, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் பெரும் வளர்ச்சியைக் கண்டன. மன்மோகன் சிங்கின் பொருளாதார தாராளமய நடவடிக்கை இன்று வரையிலும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகப் பொருளாதார வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.