நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் என்ற முழு முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்துத் துறைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அத்தியாவசிய துறைகளான சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்டவை மட்டுமே செயல்பட்டுவரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் இதன் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள சிறப்புப் பொருளாதார நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஆனால் அறிவித்து இத்தனை நாள்களாகியும் அரசுத் தரப்பு முன்னெடுப்புப் பற்றி எந்தத் தகவலும் அளிக்காதது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது எனவும் மத்திய அரசு பொருளாதார அழிவைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் பொருளாதார நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
Even as we are readying an economic package to help us through the Corona lockdown (on priority, to be announced soon) I will address the media at 2pm today, specifically on statutory and regulatory compliance matters. Via video conference. @FinMinIndia @PIB_India @ANI @PTI_News
— Nirmala Sitharaman (@nsitharaman) March 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Even as we are readying an economic package to help us through the Corona lockdown (on priority, to be announced soon) I will address the media at 2pm today, specifically on statutory and regulatory compliance matters. Via video conference. @FinMinIndia @PIB_India @ANI @PTI_News
— Nirmala Sitharaman (@nsitharaman) March 24, 2020Even as we are readying an economic package to help us through the Corona lockdown (on priority, to be announced soon) I will address the media at 2pm today, specifically on statutory and regulatory compliance matters. Via video conference. @FinMinIndia @PIB_India @ANI @PTI_News
— Nirmala Sitharaman (@nsitharaman) March 24, 2020
செய்தியாளர் சந்திப்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீரமைக்க முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு உதவிக்கரம் நீட்டும் ஆனந்த் மகேந்திரா