கோவிட்-19 அன்லாக் தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுமானத் தொழில்கள் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கோடாக் நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த செப்டம்பர் மாத காலகட்டத்தில் நாட்டின் கட்டுமானத் தொழில் சுமார் 10-12 விழுக்காடு உயர்வை சந்தித்துள்லது.
இதையடுத்து, அக்டோபர் மாதத் தொடக்கத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைச் சந்தித்துள்ளன. நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் சிமெண்ட் விலை 5 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் விலை ஸ்திரத்தன்மையில் உள்ளது. தென் மாநிலங்களில் 2 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நாட்டின் கட்டுமான பொருள்கள் விலை உயர்வைச் சந்தித்துள்ளது, பொருளாதார மீட்சியை குறிக்கிறது. கரோனா லக்டவுன் காரணமாக ஏப்ரல் தொடங்கி ஜூலை வரை கட்டுமானத் தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்துவந்த நிலையில் தற்போது நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த தேவை ஏற்றம் கானப்படுகிறது.
இதையும் படிங்க: 10 நாள்களுக்குப் பின் பெரும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தை!