ETV Bharat / business

"நிதிச்சலுகை" சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு - ப்ரதிம் ரஞ்சன் போஸ் சிறப்புக் கட்டுரை - ரூ.20 லட்சம் கோடி பொருளாதார நிதிச் சலுகை

டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா சிறப்பு நிதிச்சலுகை குறித்து பொருளாதாரா நிபுணர் ப்ரதிம் ரஞ்சன் போஸ் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Nirmala
Nirmala
author img

By

Published : May 18, 2020, 12:28 PM IST

அமெரிக்கா போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளைப்போல் இந்தியாவிலும் சிறப்பு நிதிச் சலுகை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவியது. குறுகிய கால தேவைகளைத் தக்கவைக்க இந்த அமைப்பில் போதுமான பணப்புழக்கம் இருப்பதை இந்திய அரசாங்கம் உறுதிசெய்ததுடன், எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களைச் செய்வதற்கு இந்தச் சூழலைப் பயன்படுத்தியது.

இந்த முயற்சியின் முதன்மை நோக்கம், இந்தியாவை உலகளாவிய முதலீட்டாளர் சந்தையில் ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவது, விரைவான நேரத்தில், இப்போது சீனாவில் குவிந்துள்ள மதிப்புச் சங்கிலியின் கணிசமான பங்கை ஈர்ப்பதற்கான முன்னெடுப்பாகும்.

ஆம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறுகிய கால நெருக்கடியைத் தணிக்க உதவும் வகையில் பணம், ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், இலவச உணவு தானியங்கள், சமையல் எரிவாயு போன்றவற்றின் மூலம் ஏழைகளுக்கு அரசு அறிவிப்புகளை வழங்கியுள்ளது. லாக்டவுன் தொடக்கத்தில் பிரதமரின் கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் இதன் பெரும்பகுதி அறிவிக்கப்பட்டது.

ரூ.20 லட்சம் கோடி தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்த முதல் மூன்று அறிவிப்புகள் மேற்கண்ட முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாக இருந்தது. மேற்கண்ட அறிவிப்புகளின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு விழுக்காடு ஆகும்.

மற்ற அறிவிப்புகள் நிதித்துறை சார்ந்து பணப்புழக்கத்தை விரிவடையச் செய்வதாகும். அதாவது பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு நிதி சாளரங்களை உருவாக்குதல். அரசின் அறிவிப்பின் நோக்கமானது தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இணக்கமான சூழல் அமைப்பை உருவாக்குவதும், மூலோபாயமற்ற அரசு துறைகளிலிருந்து மதிப்பைத் திறப்பதும் ஆகும்.

கரோனா அவசரநிலைக்கு உடனடியாக செயல்படத்தொடங்கிய இந்தியா முன்மாதிரியான முறையில் நோய்த் தீவிரத்தை கட்டுப்படுத்தியது. ரூ .1.7 லட்சம் கோடி பிரதமர் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் நேரடி நன்மை பரிமாற்ற திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டன.

நிதிச் சலுகைகளை மக்களிடம் நேரடியாக வழங்குவது எளிதானது அல்ல. இதில், அமெரிக்கவை ஒப்பிடுகையில், இந்தியாவின் நடவடிக்கை சுமூகமானது. மோடி அரசின் முதல் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜன்தன், ஆதார் போன்ற நடவடிக்கைகள் இதில் முக்கிய பங்காற்றின.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அளவீட்டில் 70 விழுக்காடு கடனும், மொத்த நிதிப் பற்றாக்குறையை (மாநிலங்கள் உட்பட) 6.5 விழுக்காடு கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய பொருளாதாரங்களின் பணப்பரிமாற்றங்களை வழங்குவதில் இந்தியாபோல் சிறப்பாக செயல்படவில்லை.

இருப்பினும், கூடுதல் பட்ஜெட் நிதிகளை மத்திய அரசு எவ்வாறு ஏற்பாடு செய்யும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய சூழலில் மத்திய அரசுக்கு கூடுதல் கடன் வாங்குவதற்கு அதிக இடம் இல்லை.

ஒட்டுமொத்த வருவாய் சேகரிப்பில் நிச்சயமற்ற தன்மை காரணமாக நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசு புதிய அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்த்தது. நெடுஞ்சாலை கட்டுமானம் அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என்பது ஒரு பார்வை.

இந்நிலையில், பாரத்மாலா திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஏற்கனவே ஒரு பெரிய திட்டங்களை உருவாக்கியுள்ளது. புதிய அறிவிப்புகளுக்கான களத்தைத் செயல்படுத்துவதற்கு முன்னதாக, இதுபோன்ற திட்டங்களின் செயல்பாட்டு வேகத்தை இப்போது அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கரோனாவுக்குப் பிந்தைய உலகம் பல்வேறு ஆச்சரியமான மாற்றங்களை சந்திக்கலாம். பல்வேறு அம்சங்களில் அரசு முடிவெடுக்கும் செயல்திட்டத்தில் வேகம் காட்டப்படும். இத்தகைய சூழ்நிலையில், இந்தியா வேகமாக செயல்படுவதற்கும், விரைவாக தனது கட்டமைப்பை ஒழுங்காக வைப்பதற்கும் துறை ரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை காத்திருக்காமல் தற்போதே செயல்படத் தொடங்கியுள்ளது.

அரசின் தற்போதைய சீர்திருத்த முயற்சிகள் உறுதியானவை. வேளாண் துறையில் முதலீடு செய்வது , விவசாயிக்கு சந்தைப்படுத்தல் சுதந்திரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் அனைத்தும் முக்கியமான முன்னெடுப்புகளாகும். இவை ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதைய வர்த்தக நடைமுறைகளை முழுமையாக மாற்றியமைக்கும்.

தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்கள் ஏற்கனவே தொடர்புடைய சட்ட விதிகளை திருத்தியுள்ளன; பல மாநிலங்கள் இந்த நடவடிக்கையை சுயநல நோக்குடன் எதிர்க்கலாம். மேற்கு வங்கம் போன்ற நிதி நிலவரத்தில் பலவீனமான மாநிலங்கள் இத்தகைய சீர்திருத்தங்களைத் தடுக்க எப்போதும் முனைப்புடன் இருந்தன.

இத்தகைய சீர்திருத்தத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும், சந்தை மற்றும் முதலீட்டு இடமாகவும் இந்தியாவை மேம்படுத்த உதவும்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் படையெடுக்கும் நிறுவனங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.