ETV Bharat / business

புகையில்லா தீபாவளி: ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை! - காற்று மாசு

டெல்லியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது தகுந்த இடைவெளியைத் தவிர்க்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், காற்று மாசுவினால் ஏற்படும் பாதிப்பு பல மடங்காக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதன் காரணாக ஜனவரி 1ஆம் தேதிவரை பட்டாசுகள் வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை
டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை
author img

By

Published : Sep 29, 2021, 7:33 PM IST

டெல்லி: ஜனவரி 1ஆம் தேதிவரை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது.

டெல்லியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது கரோனா தொற்று காலத்தின் கட்டுப்பாட்டு விதியான தகுந்த இடைவெளியைத் தவிர்க்கும்விதமாக இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், காற்று மாசுவினால் ஏற்படும் பாதிப்பு அதனைவிடப் பல மடங்காக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 1, 2022 வரை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவை மீறுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு

காற்று மாசுவினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் மனிதனுக்கு மிகப்பெரிய உடல்நலக்கேடு ஆகும். காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூளை பக்கவாதம், இதய கோளாறு, நுரையீரல் புற்று நோய் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்க முடியும்.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கைப்படி மனித உயிரிழப்புகளில் காற்று மாசு, இதர மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

காற்று மாசுவால் ஏற்படும் சுவாச நோய்க்கு 49 விழுக்காடு பேர் உயிரிழக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நுரையீரல் புற்றுநோயால் 33 விழுக்காடு நபர்களும், நீரிழிவு, இதய நோய் காரணமாக 22 விழுக்காட்டினரும், மூளை பக்கவாதத்தால் 15 விழுக்காட்டினரும் மரணமடைவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வட மாநிலங்களான பிகார், சண்டிகர், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்றவை சிந்து - கங்கை சமவெளி என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் 40 விழுக்காடு, அதாவது 48 கோடி மக்கள் இந்தப் பகுதியில்தான் வாழ்கின்றனர்.

இந்த அறிக்கை குறிப்பாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தின் நிலைமையை எடுத்துக்காட்டுகிறது, அங்கு சராசரி ஒரு நபர் இப்போது கூடுதலாக 2.5 முதல் 2.9 ஆண்டுகள் தனது ஆயுட்காலத்தில் இழக்கிறார்.

குறையும் ஆயுட்காலம்

ஆயுட்காலம் எண்ணை அடைய, ஆராய்ச்சியாளர்கள் நீண்ட கால காற்று மாசுபாட்டின் பல்வேறு நிலைகளுக்கு ஆளான மக்களின் ஆரோக்கியத்தை ஒப்பிட்டு, அதன் முடிவுகளை இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் பிற இடங்களுக்கும் பயன்படுத்தினர்.

2019ஆம் ஆண்டுபோல காற்று மாசுபாடு தொடர்ந்தால், வட இந்தியாவில் வாழும் மக்கள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை இழக்க நேரிடும் என்று அறிக்கை கூறுகிறது. வயதானவர்களின் வாழ்க்கையைக் குறைப்பதில் காற்று மாசுபாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில், காற்று மாசுபாட்டால் ஏற்படும் இறப்புகளில் 75 விழுக்காடு 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நிகழ்கிறது. 40 விழுக்காடு இந்தியர்களின் ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் சில மாதங்கள் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் எந்தவிதமான வாகனங்களும் இயக்கப்படாமல், தொழிற்சாலைகள் இயங்காமல் காற்று மாசு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பறவைங்களும் எங்க வீட்டு பிள்ளைங்தான்: ஆச்சரிய கிராமம் கூந்தன்குளம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.