ETV Bharat / business

ஒன்றிய அரசு பட்ஜெட் மதிப்பீட்டில், முதல் அரையாண்டின் நிதிப் பற்றாக்குறை 35% விழுக்காடு!

ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை முதல் அரையாண்டில் (எச் 1) பட்ஜெட் இலக்கில் 35 விழுக்காட்டை எட்டியுள்ளது.

fiscal deficit, fiscal deficit touches 35 pc, Controller General of Account data, gap between expenditure and revenue, GDP, gross domestic product, நிதிப் பற்றாக்குறை, முதல் அரையாண்டு, ஜிடிபி, வரி, வணிக செய்திகள், பிசினஸ் செய்திகள்
முதல் அரையாண்டின் நிதிப் பற்றக்குறை
author img

By

Published : Oct 30, 2021, 7:41 PM IST

டெல்லி: பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளர் ஆணையம் (சிஜிஏ) முதல் அரையாண்டின் நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2021 செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை 5லட்சத்து 26ஆயிரத்து 851 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 35 விழுக்காடாகும்.

இருப்பினும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் மிகவும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. கடந்த நிதியாண்டில் கரோனா பேரிடரை எதிர்கொள்ள அதிக செலவிட வேண்டியிருந்ததால் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கை தாண்டி 114.8 விழுக்காடாக அதிகரித்ததுள்ளது என சிஜிஏ தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 விழுக்காடாக (அதாவது 15லட்சத்து 6ஆயிரத்து 812 கோடி ரூபாய்) இருக்கும் என்பது ஒன்றிய அரசின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: நவம்பர் மாதத்தில் 17 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.