இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சி விகிதம் இரண்டு ஆண்டுகளாகவே குறைந்து காணப்படுகிறது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தியச் சந்தை அதிலிருந்து மீண்டு வருவருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், வரிக்குறைப்பு மற்றும் உள்நாட்டுத் தேவையின்உயர்வு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச வருமானம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக நடப்புஆண்டில் 7.2 சதவிகிதம் வளர்ச்சியையும், 2020 ஆண்டில் 7.3 சதவிகித வளர்ச்சியையும் இந்திய அடையும் என ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வில் கணித்துள்ளது.
ஆசிய வளர்ச்சிப் பார்வை-2019 (ஏசியன் டெவலப்மென்டல் அவுட்லுக்- 2019) எனப்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின்2019 ஆண்டிற்கான ஆய்வறிக்கையில், 'பலவீனமான விவசாய உற்பத்தி, கச்சா எண்ணெயின் விலை உயர்வு, அரசின் செலவினங்களில் சுணக்கம் போன்ற காரணிகளால் இந்தியாவின் வளர்ச்சி 2018ஆம் ஆண்டில் ஏழுசதவிகிதமாகக் குறைந்தது.
உள்நாட்டுத் தேவையை அதிகரிப்பதன் மூலம் வருமானத்தைப் பெருக்கி பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் வைத்து வளர்ச்சியை உயர்த்தும் கொள்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி மந்தமாக காணப்பட்டாலும்உள்நாட்டுச் சந்தையைப் பலப்படுத்துவதன் மூலம்பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அடித்தளமாக இருக்கும் எனஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் யசூய்கி சவாடா கூறியுள்ளார்.