இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மே மாதம் தேர்தல் முடிந்து மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு 2019-20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்யவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 11 மணியளவில் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆட்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமன், தற்போது முதல் பெண் நிதியமைச்சராக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.