2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்செய்து உரை நிகழ்த்திவருகிறார். இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதரத் துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகள் பலவற்றை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
- 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
- 112 ஆர்வமிகு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
- ஆயுஷ்மான் பாரத் கனவுத் திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- இரண்டாம் கட்ட நகர்ப்புறங்களுக்கு மேலும் பல மருத்துவமனைகள் தேவைப்படுகின்றன.
- இந்திரதனுஷ் திட்டத்தின்கீழ் புதிய நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படும். ஏழைகளின் சுகாதார மேம்பாட்டுக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 'ஜல் ஜீவன் திட்டம்' முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.
- நாட்டில் மருத்துவர்களுக்கான பற்றாக் குறை அதிகரித்துள்ளது. இதைப் போக்கும்வகையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்படும். இந்தக் கல்லூரிகள் அரசு - தனியர் கூட்டு நடவடிக்கை மூலம் உருவாக்கப்பட்டு, மாநில அரசுக்கு சிறப்பு நிதிச்சலுகைகள் வழங்கப்படும்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020: 'அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்'