2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நிதித்துறைக்காக பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவற்றில் சிலவற்றை காண்போம்.
1) கடந்த 5 ஆண்டுகளில் வாராக் கடன் குறைக்கப்பட்டுள்ளது.
2) பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ரூ.70,000 கோடி ஒதுக்கப்படும்.
3) வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வலுப்படுத்தப்படும்.
4) பொதுமக்களுக்கு புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
5) வீடு கட்டி தரும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி மூலம் ஒழுங்குமுறைபடுத்தப்படும்.
6) பொதுத்துறை நிறுவனங்களின் நிதிச் சுமையை சீர் செய்யும் விதமாக அதன் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும். இதன் இலக்கு ரூ.1.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
7) பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் கடன் குறைந்த அளவே உள்ளது.