மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அவற்றில் உள்ள முக்கிய அம்சங்களை கீழே காண்போம்.
அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்:
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் 1.95 கோடி வீடுகள் 2019-20 முதல் 2021-22 வரையிலான கால அளவில் கட்டத் தரப்படும்.
- ரயில்வே துறை நவீனமயமாக்கப்படும்.
- பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா மூலம் 1.25 லட்சம் கிமீ சாலைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 80,250 கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.
- பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ரூ. 70,000 கோடி ஒதுக்கப்படும்.
- வீடு கட்டி தரும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி மூலம் ஒழுங்குமுறைபடுத்தப்படும்.
- 400 கோடி வரை லாபம் ஈட்டும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு 25 விழுக்காடு வரி வசூலிக்கப்படும்.
- பொதுத்துறை நிறுவனங்களின் நிதிச் சுமையை சீர் செய்யும் விதமாக அதன் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும். இதன் இலக்கு 1.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 2024ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
- ஸ்வச் பாரத் திட்டம் மூலம் திட கழிவு மேலாண்மை விரிவாக்கம் செய்யப்படும்.
- பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பாதா யோஜனா மூலம் மீன்வளத்துறை நவீனத்துவம்படுத்தப்பட்டு, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, உற்பத்தி அதிகபடுத்தப்படும்.
- வருடத்திற்கு ரூ 1.5 கோடிக்கு கீழ் வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு பிரதான் மந்திரி கர்மா யோகி மான்தான் திட்டத்தின் கீழ் ஒய்வூதியம் அளிக்கப்படும்.
- முத்ரா திட்டம் மூலம் பெண்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
- புதிய கல்வி கொள்கை மூலம் உலகத்தரம் வாய்ந்த உயர்நிலை கல்வி நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு ரூ.400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அந்நிய நேரடி முதலீட்டுக்கு அதிக கவனம் செலுத்தப்படும், காப்பீட்டுத்துறைக்கு 100 விழுக்காடு அந்நிய முதலீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.