டெல்லி : நாட்டின் வரவு செலவு திட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
முன்னதாக நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை இன்று வெளியாகிறது. இதற்கிடையில் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் இன்று (ஜன.31) மாலை 3.45 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்.
இந்தப் பட்ஜெட்டில் சரக்கு, சேவை வரியில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு நாளை இரு அவைகளும் மதியம் 11 மணிக்கு கூடுகின்றன.
அதன்பின்னர் மாநிலங்களவை காலை 10 மணி முதல் 3 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : Budget session 2022: புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்!