உலகளாவிய கரோனா வைரஸ் தாக்கமானது சுகாதாரத் துறை மட்டுமல்லாது பொருளாதாரத்தையும் கடும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பெரும்பலான நாடுகளில் விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் 65 விழுக்காடு விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த நிலையானது மேலும் சில மாதங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்துக்கான விமான பயணங்கள் மட்டும் தற்போது இயக்கப்படுவதால் கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.
இது குறித்து சர்வேதச விமான போக்குவரத்து சம்மேளனம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், விமான போக்குவரத்துத் துறை தற்போது சந்தித்துவரும் சர்வதேச சூழலை எப்படிச் சமாளிப்பது, மூன்று மாதங்களில் என்னென்ன மாற்றம் கொண்டுவர வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மட்டும் விமான போக்குவரத்துத் துறை சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பைச் சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு நேரடி உதவித் தொகை - மத்திய அரசு உத்தரவு