கரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்காக வேலையை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும் நிலையில், சிலர் தங்களது வேலைகளை இழந்து புதிய வேலைகளை தேடிவருகின்றனர்.
இது குறித்து சென்டர் தொழிலாளர் நம்பிக்கைக் குறியீடு (LinkedIn Workforce Confidence Index) நடத்திய ஆய்வில், ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை தளர்வுகள் அளிக்கப்பட்டதால், வேலை தேடுவோர் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நம்பிக்கை மீண்டெழும் பொருளாதாரத்தால் பிறந்துள்ளது. இதனால் இ-காமர்ஸ், ஐடி சேவைகள், காப்பீடு, கேமிங் போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் கூட வாய்ப்புள்ளது. மேலும், பொருளாதாரத்தை உயர்த்த அனைத்து நிறுவனங்களையும் புதுமைப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பல துறைகளில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க...அடுத்த 4 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறை மீளுமா? ஃபாடா துணைத் தலைவர் பேட்டி!