கைப்பேசி துறையில் புதிய சாதனைகளைத் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் சியோமி நிறுவனம், புதியப் படைப்புகள் மூலம் பயனாளர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 2019இல் சியோமி நிறுவனம் தன்னுடையை அன்டர் டிஸ்பிளே கேமரா ஸமார்ட்போன் புதிய டிசைனை சீனா அறிவுசார் சொத்து நிர்வாகத்தில் (China Intellectual Property Administration) காப்புரிமை பெறுவதற்கு பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், சியோமி நிறுவனத்திற்கு அன்டர் டிஸ்பிளே கேமரா ஸ்மார்ட்போனுக்கான காப்புரிமை கிடைத்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த ஸ்மார்ட்போனில் கேமிரா மேற்பகுதியில் இடது பக்கமோ அல்லது நடுவில் இருக்கும் வகையில் காப்புரிமை பெற்றிருக்கலாம்.
இது இன் டிஸ்பிளே கை ரேகை ஸ்கேனரைப் போன்று அன்டர் டிஸ்பிளே செல்ஃபி கேமராவைக் கொண்டதாக இருக்கும். பயனாளர்கள் புகைப்படங்கள் எடுக்க கிளிக் செய்யும் போது, செல்பி கேமிரா இருப்பதே தெரியவரும். இதற்கு முன்னதாக, சியோமி நிறுவனம் குவாட் ரியர் கேமராக்கள் (quad rear cameras) கொண்ட புதிய இரட்டை டிஸ்பிளே ஸ்மார்ட்போனுக்கும் (dual-display smartphone) காப்புரிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சியோமியின் எம்ஐ 10 ஸ்மார்ட்போன் வெளியீடு தேதி அறிவிப்பு!