உலக மக்களுக்கே வாட்ஸ்அப் இல்லையென்றால் கை உடைந்தமாதிரி தான் தோன்றும். வீட்டுக்குள் இருந்துகொண்டே தனது குழந்தைகளை சாப்பிட அழைப்பதற்கு வாட்ஸ்அப்பை தாயார்கள் உபயோகிக்கும் காலத்திற்கு மாறிவிட்டோம். கரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பயனாளர்கள் தங்களது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அதிகளவில் வாட்ஸ்அப் மூலமே பேசி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, வாட்ஸ்அப் நிர்வாகம் பொய்யான செய்திகள் பரவுவதை தடுப்பதற்காக ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மட்டுமே மெசேஜை பார்வேடு செய்யும் வகையில் மாற்றினர். மேலும், அத்தகையை மெசேஜில் பார்வேடு எனவும் குறிப்பிட்டிருக்கும். இதன் மூலம், இது பார்வேடு மெசேஜ் என பயனாளர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், கரோனா வைரஸுடன் உலகம் போராடும் இக்கட்டான சூழ்நிலையில் தேவை இல்லாமல் பரவும் பொய்யான செய்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு மெசேஜை ஒரே நேரத்தில் ஒருத்தருக்கு மட்டுமே பகிரும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் மாற்றியுள்ளனர். இச்செயலினால் மக்கள் மத்தியில் தனிப்பட்ட கலந்துரையாடல் அதிகளவில் வளரும் வாய்ப்பு உள்ளது.
இதுமட்டுமின்றி வாட்ஸ்அப் நிர்வாகம் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து மக்களுக்கு துல்லியமான தகவல்களை பயனாளர்களுக்கு கிடைக்க முடிவு செய்துள்ளனர். வாட்ஸ்அப் கரோனா வைரஸ் தகவல் மையத்தில் (WhatsApp Coronavirus Information Hub) சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை எளிதாக அறிந்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆயிரத்து 300 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் - 8,400 புள்ளிகள் தொட்ட நிஃப்டி!