4ஜி தொலைத்தொடர்பு சேவையை விட நூறு மடங்கு வேகம் பொருந்திய 5ஜி சேவை, தொடர்பான ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரிட்டிஷ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் பிரிட்டனில் உள்ள ஏழு நகரங்களில் தனது 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது.
பிரிட்டன் நாட்டிலுள்ள லண்டன், கார்டிஃப், மான்செஸ்டர், கிளாஸ்கோ, பர்மிங்காம், பிரிஸ்டல், லிவர்பூல் ஆகிய நகரங்களில் தனது 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் இஇ லிமிட்டெட் நிறுவனத்திற்குப் பிறகு 5ஜி சேவையை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக வோடஃபோன் இருக்கும். இவ்வருட இறுதியில் மேலும் 12 நகரங்களிலும் 5ஜி சேவை நீட்டிக்கப்படவுள்ளது.
வோடஃபோன் நிறுவனம் பிரிட்டனில் மூன்று விதமான கட்டணங்களை அறிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச திட்டமாக 23பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூபாய்க்கு அதிகபட்சம் 2எம்பி வேகத்தில் அன்லிமிட்டேட் டேட்டாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல 26பவுண்ட் (2250 ரூபாய்) திட்டத்தில் 10எபி வேகத்தில் அன்லிமிட்டேட் டேட்டாவும், மூன்றாவதாக 30பவுண்ட் (ரூ.2600) திட்டத்தில் வரையறுக்கப்படாத உச்சபட்ச வேகத்தில் அன்லிமிட்டேட் டேட்டாவை வழங்குகிறது.