கடந்த சில ஆண்டுகளாக தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. பொருளதார சிக்கல், போட்டி நிறுவனங்களின் கலக்கல் ஆபர்ஸ், திருத்தப்பட்ட மொத்த வருவாய்( adjusted gross revenue(AGR) போன்ற பிரச்னைகள் வந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக பிரபலமான வோடபோன் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது. ஏஜிஆர் கணக்கின்படி 50 ஆயிரம் கோடி தொகை வோடபோன் நிறுவனம் பெயரில் நிலுவையில் உள்ளது.
இதை எப்படி ஈடுகட்டவது என வோடபோன் யோசித்து கொண்டிருந்த சமயத்தில் தான், உச்சநீதிமன்றம் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் ஏஜிஆர் நிலுவை தொகையை 10 விழுக்காடு இந்தாண்டு கட்ட வேண்டும். மீதமுள்ள தொகையையும் 10 விழுக்காடாக 10 ஆண்டிற்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தது.
இதையடுத்து, வோடபோன் நிறுவனங்களில் Verizon Communications Inc நிறுவனமும், இதோடு அமேசான் நிறுவனமும் முதலிடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், வோடபோன் நிறுவனம் தனது பங்குகளை விற்று 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதிதிட்டட முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வோடபோன் நிறுவனமா சந்தித்து வருமா பொருளாதார நெருக்கடி சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.