ராஜஸ்தானில் உள்ள பார்மர் மற்றும் ஜலோர் ஆகிய மாவட்டங்களில் மூவாயிரத்து 111 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. அங்கு ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே எண்ணெய் உற்பத்தி செய்ய இதுவரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனது உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் விதமாக கூடுதல் இடத்தை வழங்க மத்திய அரசிடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டிருந்தது. இந்த கோரிக்கை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஆலோசனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அந்தக் குழு, விரிவாக்கத்திற்கு தற்போது அனுமதி அளித்துள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது எண்ணெய் உற்பத்தித் திறனை நான்கு லட்சம் பீப்பாயாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.