டெல்லி: கரோனா நெருக்கடியின் காரணமாக 600 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப உபெர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
வேறெந்த வழியும் இல்லாத சூழலில், ஊழியர்களின் நெருக்கடியைக் குறைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என உபெர் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய வணிகத்தின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுளில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சோதனையான காலம். எங்கள் ஊழியர்களை எங்களை விட்டு பிரிந்து செல்வது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்கள் நிறுவன முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்கினை என்றும் நினைவுகூருவோம் என்று நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்டகாசமாக வெளியான ரியல்மியின் நான்கு தயாரிப்புகள்!
உபெர் நிறுவனத்தில் இருந்து பிரியும் ஊழியர்களுக்கு, 10 வார ஊதியமும், ஆறு மாதத்திற்கான மருத்துவக் காப்பீடும் அளிக்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுவரையில் உலக நாடுகளில் உள்ள 6700 ஊழியர்களை கரோனா நெருக்கடியின் விளைவாக உபெர் நிறுவனம் வேலையை விட்டு அனுப்பியுள்ளது.
உபெர் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமாகத் திகழும் உள்நாட்டின் ஓலா நிறுவனத்தின் வருவாய், கரோனா நெருக்கடியால் 95 விழுக்காடு சரிந்ததையடுத்து, 1400 ஊழியர்களை நீக்கம் செய்தது கவனிக்கத்தக்கது.