ETV Bharat / business

2025ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் 50% பெண் ஊழியர்கள்: ட்விட்டர் முடிவு - twitter employers

உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் அலுவலகங்களில், அனைத்து செயல்பாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களில், 50 விழுக்காடு பெண்களை 2025க்குள் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கின்படி 42.2 விழுக்காடு பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

twitter preferred 50 percent women employers

author img

By

Published : Oct 2, 2020, 9:28 PM IST

சான் பிராசிஸ்கோ (அமெரிக்கா): தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை கறுப்பினத்தனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும், எந்த பாரபட்சமும் இல்லாமல், அனைத்து பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் கூறியிருக்கிறது. சமூக வலைதளமான ட்விட்டர், சமீப காலங்களில் தங்களின் அசாத்திய செயல்பாடுகளின் மூலம், மக்களுக்கான தளமாக தங்களை நிலைநிறுத்தி வருகிறது.

வெறுப்பு பரப்புரை செய்த அமெரிக்க அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது என அனைத்து தளங்களிலும் தங்களை சாமானிய மக்களுக்காக முன்னிலைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.