ETV Bharat / business

எல்ஜி பாலிமர்ஸ் அனுமதி கோரிய மனு; உயர் நீதிமன்றத்தில் முறையிட உச்ச நீதிமன்றம் யோசனை! - எல்ஜி ராசாயன தொழிற்சாலை

எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன வாயு கசிவு வழக்கில் நிறுவனத்தின் வளாகத்தை பறிமுதல் செய்து மூட ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அம்மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு குறித்து பதிலளித்த நீதிபதிகள், இதுகுறித்து மாநில உயர் நீதிமன்றத்தை நாடும்படி கூறிவிட்டு, வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

lg gas leak
lg gas leak
author img

By

Published : May 26, 2020, 5:57 PM IST

டெல்லி: எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் வழக்கை விசாரிக்க மறுத்து, உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சமயத்தில், நிறுவனத்தில் நுழைய தகுதியுடைய 30 பேர் கொண்ட பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் தனது சார்பில் மூன்று வாதங்களை முன்வைத்தார். அதில், உச்ச நீதிமன்ற தலையீடு இல்லாமல் உத்தரவுகள் பிறபிக்க கூடாது. ஆலைக்குள் அபாயகரமான பொருட்கள் இருப்பதை உறுதிசெய்யுங்கள். அங்குள்ள பொருட்களை நிறுவன தரப்பில் பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய அனுமதியளிக்க வேண்டும்.

நிறுவனம் சார்ந்தவர்கள் உள்ளே சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் எவ்விதமான நிபந்தனைகளுக்கும் நிறுவனம் கட்டுப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமர்வு, “இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து உயர் நீதிமன்றதில் முறையிடவும்” என்று கூறி வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.