உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மூன்றாம் காலாண்டின் லாப விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 32.6 விழுக்காடு லாபத்தை சாம்சங் நிறுவனம் பெற்றுள்ளது. கடந்தண்டு 18.8 விழுக்காடு லாபத்தை வைத்திருந்த இந்நிறுவனம், தற்போது பெரும் உயர்வைச் சந்தித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு சாம்சங் நிறுவனம் தற்போதுதான் சந்தையில் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதிய நிறுவனங்களின் வரவால் பின்னடைவைச் சந்தித்துவந்தது.
இந்த பின்னணியில் 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஏற்றப்பாதையில் சாம்சங் அடியெடுத்து வைத்துள்ளது. அதேவேளை உலகின் அதிக லாபம் கொண்ட நிறுவனமாக ஆப்பிள் தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. மொத்த சந்தை மதிப்பில் 60.5 விழுக்காடு லாபத்தை ஆப்பிள் கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த காலாண்டைக் காட்டிலும் சாம்சங்கின் லாபம் குறைந்துள்ளது.
அதேபோல் வருவாய் பங்கிலும் ஆப்பிளுக்கு போட்டியாக தற்போது சாம்சங் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: உலகின் ஆடம்பரமான குடியிருப்பு நகரம் எது எனத் தெரியுமா?