சாம்சங் நிறுவனம் செல்போன், டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் தயாரித்து சந்தையில் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக சாம்சங் பே டெபிட் கார்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சாம்சங் பே நிறுவனத்தின் துணைத் தலைவர் சாங் அஹ்ன் கூறுகையில், " இந்த கோடைக் காலத்தில் சாம்சங் நிறுவனம் சோஃபியுடன் இணைந்து சாம்சங் பே டெபிட் கார்டை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த டெபிட் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் கேஷ் பேக் ஆஃபர் கிடைக்கும் வகையில் ஒரு புதிய வகையான டெபிட் கார்டை உருவாக்கியுள்ளோம். இதுதொடர்பான தெளிவான விவரங்கள் ஓரிரு வாரங்களில் பகிரப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கையெழுத்தைக் கணினியில் பேஸ்ட் செய்ய உதவும் கூகுள்